அட்ஜஸ்ட் பண்ணினால் தான் படவாய்ப்பு.. திருநங்கை நடிகைக்கு தயாரிப்பாளர் கொடுத்த டார்ச்சர்..

Report
359Shares

சினிமாவில் பல விதமான கதைகளத்தில் உருவாகும் படங்களும் பேய் படங்களும் அடங்கும். பேய் படங்களை வைத்து இயக்க பலரும் யோசித்து யோசித்து பலவிதமாக எடுத்து வருகிறார்கள். அதில் தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கே உரித்தான இயக்குநர் என்றால் அது ராகவா லாரன்ஸ் தான். நடன இயக்குநராகவும், நடிகர், இயக்குநர் என்று கலக்கி வருகிறார்.

இவர் இயக்கி 2011ல் வெளியான 'காஞ்சனா' படம், மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை தேடித்தந்தது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார். திருநங்கைகளை பற்றி மையமாக வைத்து லாரன்ஸ் இயக்கி இருப்பார். இப்படத்தின் திருநங்கை கதாபாத்திரத்தில் திருநங்கை நடிகை ப்ரியா நடித்திருப்பார்.

சமீபத்தில் பெண்கள் தினத்தையொட்டி பேட்டியளித்து பேசியுள்ளார். பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகள், அட்ஜெஸ்ட்மண்ட் பற்றி தொகுப்பாளர் கேட்டதற்கு,’ எனக்கும் ஒரு தயாரிப்பாளர் காஸ்ட் கோச் கொடுத்துள்ளார்.

படவாய்ப்பிற்காக சமுகவலைத்தளத்தில் ஆர்வமாக இருக்கும் என்னிடம் பல இயக்குநர், தயாரிப்பாளர்கள் பேசிவார்கள். அந்தவகையில் ஒரு தயாரிப்பாளர் பட வாய்ப்பு குறித்து சாதாரணமாக என்னிடம் போன் நம்பர் வாங்கி பேசினார். அதன்பின் அவரது பேச்சு வேறமாதிரி மாறியது. நீங்கள் எப்படி இப்படி மாறினீர்கள் என்று என் உடல் சம்பந்தமாக பேச ஆரம்பித்தார். அட்ஜெஸ்ட்மெண்ட் ஒருந்தால் தான் படவாய்ப்புகள் வரும் என்று அவர் கூறினார். நான் உடனே அவரது அழைப்பை கட் செய்து விட்டேன்.

இதுபோன்று பலரிடம் இந்த மாதிரியான கால் எனக்கு வந்துள்ளது. அதையெல்லாம் நான் தவிர்த்து பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். என்னை மாதிரி இருக்கும் பல திருநங்கைகள் வாழ்க்கையிலும் இது போன்று நடந்திருக்கும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் நடிகை ப்ரியா.

15791 total views