குடும்பத்தை அசிங்கமாக பேசும் தர்ஷன் ரசிகர்கள்.. சனம்ஷெட்டியால் நடிகை ஷெரினுக்கு ஏற்பட்ட பரிதாபம்..

Report
188Shares

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதை தொடர்ந்து ஜெயா, விசில், உற்சாகம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். படவாய்ப்புகள் இல்லாமல் தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலானார் ஷெரின்.

அதன்பின் சென்ற வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷனுடன் நெருக்கமாக இருந்தார். சிலர் தவறாக பேசியதால் எனக்கும் தர்ஷனுக்கும் இருக்கும் உறவு எங்களுக்கு மட்டும் தான் தெரியும். நட்பைதாண்டி ஒரு அன்புதான் இருக்கிறது என்று கூறி அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இதனை கேள்விபட்ட தர்ஷன் காதலித்து வந்ததாக கூறி நடிகை சனம் ஷெட்டி பல சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சைக்கும் தர்ஷன் நிகழ்ச்சி முடிந்து பல காரணங்களால் எங்கள் காதலை முறித்து கொண்டோம் என்று கூறினார்.

இதில் கடந்த சில மாதங்களாக தர்ஷன் சனம் ஷெட்டியின் காதல் பிரிவிற்கு ஷெரின் தான் காரணம் என்று சமுகவலைத்தளங்களில் கடுமையாக பரவியது. இதற்கு ஷெரினையும் அவரது குடும்பத்தினரையும் கேவளமாக திட்டிதீர்த்து வருகிறார்கல் நெட்டிசன்கள். இதனால் ஷெரின் மனதால் பாதித்து அவரது சமுகவலைத்தள பக்கத்தில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் திட்டி ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

போலி கணக்கில் இருந்து என்னை இப்படி விமர்சனம் செய்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல தேவையில்லை. ஆனால் யாரை குறை சொல்லவேண்டும் என்றாலும் அதனை அறிந்து கூறுங்கள். மற்றவர்கள் பிரிவதற்கு நான் காரணமில்லை. இதைவிட பல பிரச்சனைகள் உலகத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

🙏🏻

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

6940 total views