கமல்ஹாசனுடன் 10 ஆண்டுகளுக்கு முன் நட்பில் இருந்த நடிகை கெளதமியின் மகளா இது.. வைரலாகும் புகைப்படம்..

Report
2827Shares

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பு என்றால் இவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று வளரும் நடிகர்கள் கூறி வருவது அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் சினிமாவில் பெரிய ஜாம்பவனாக இருக்கிறார் கமல்.

கமல்ஹாசன் சினிமாவில் இருக்கும் போது நடிகை வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 1988ல் சரிகாவை திருமணம் செய்து கொண்டு சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என்ற இரு மகளை பெற்றெடுத்தனர். அதன்பின் சில காரணங்களால் கமல் ஹாசனும் சரிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு நடிகை கெளதமியுடன் தொடர்பில் இருக்கிறார் என்று வதந்திகள் பரவின. அப்போது நடிகை கெளதமி சந்தீப் பட்டியா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார். இருவருக்கும் சுபலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்கள்.

கடந்த 13 ஆண்டுகளாக திருமணமாகாமல் வாழ்ந்து வந்த கமல்-கெளதமி தற்போது சில காரணங்களால் பிரிந்தனர். என் மகள் வளர்ந்துவிட்டாள் தற்போது 12 வகுப்பு படிக்கிறாள் என்று சில ஆண்டுகளுக்கு முன் அதற்கான காரணம் என்ன என்று கெளதமி பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. 2018ல் எடுத்துக்கொண்ட அவரது புகைப்படம் தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

99801 total views