எங்கள் விவாகரத்திற்கு தொலைக்காட்சி தான் காரணம்.. காட்டமாக பேசிய தாடி பாலாஜி மனைவி..

Report
42Shares

சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி பிரபலங்களை அதிரவைத்த நிகழ்வு காமெடி நடிகர் தாடி பாலாஜியின் விவாகரத்து. தன் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், சந்தேகப்பட்டு அசிங்கமான வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்வதாக தாடி பாலாஜி மனைவி நித்யா புகாரளித்திருந்தார்.

இதனால் தன் மகளை காப்பாத்தவும் பல பேட்டிகளில் பேசி வந்துள்ளார் நித்யா. இதை தவிர்க்க இருவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டனர். இதில் இருவரும் பரஸ்வரம் ஆகி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த வாரத்தில் சூப்பர் மாம் ஷோவில் கலந்து கொண்ட நடிகை நீபாவிற்கு தவறி விழுந்து கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்ணில் தையல் போடும் அளவிற்கு விபத்து ஏற்பட்டது. இதே நிகழ்ச்சி காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவும் அவரது மகள் போஷிகாவும் கலந்து கொண்டனர்.

நீபாவிற்கு நடந்த விபத்து பற்றி நித்யா சமீபத்தில் அளித்த்திருந்தார். இருவேறான ரியாலிட்டி ஷோவில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் எது ரியாலிட்டி ஷோ என்பது தெரியாமல் இருக்கிறேன். இரு நிகழ்ச்சிகளிலும் எனக்கு கசப்பான அனுபவத்தை தந்துள்ளது.

டேன்ஸ் ஷோவில் கலந்து கொண்டபோது நானும் என் கணவரும் வீட்டில் நடக்கும் சண்டைகளை அங்கு காமிக்காமல் பார்த்துகொள்வோம். இதை சில நேரத்தில் நான் என்னையே அறியாமல் கேமரா முன் கோபத்தினை காட்ட வேண்டியதாகிற்று. இதனை வெளியுலகிற்கு தெரிந்து பல பிரச்சனைகள் உருவானது.

1488 total views