நடிகரால் எனக்கு நடந்ததை மறக்கவே மாட்டேன்.. உடல்ரீதியாக தொல்லை கொடுத்ததைபற்றி நடிகை ஓப்பன் டாக்..

Report
202Shares

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடிகர் விஷாலுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகவர் தனுஸ்ரீ தத்தா. அதற்கு முன் இந்தி மொழியில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்திருந்த போது அவருடன் நடித்த நடிகர் நானா படேகர் தனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நானா படேகர் தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தவர்.

இதுதொடர்பாக நடிகை தனுஸ்ரீ பக்கமாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விசாரணையை தொடராமல் போனது. இதையடுத்து நானா படேகர் தனுஸ்ரீ மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். இதுபற்றி மீ டூ வில் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார் தனுஸ்ரீ.

இந்நிலையில் கடந்த வாரம் 80க்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வையின்ஸ்டீவிற்கு 23 ஆண்டுகள் சிறை கொடுத்ததை அறிந்துள்ளார். இதுபற்றி கூறும் அனுஸ்ரீ, ‘ பாலிவுட் சினிமாவில் எனக்கு துரோகம் நடந்துள்ளது. பலம் வாய்ந்தவர்கள் முன் சிறு நடிகைகளுக்கும் இதுபோல நடக்கிறது என்று கூறினார்.

மேலும், நான் பலரால் கைவிடப்பட்டு அராஜகத்தின் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த விவகாரத்தில் எனக்கு பாலிவுட் சார்பாக உதவவில்லை. இதை நான் எப்போது மறக்கமாட்டேன். இதிலிருந்து மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார் தனுஸ்ரீ.

8217 total views