லேடி சூப்பர்ஸ்டார் காதலருடன் செய்த டிக்டாக் வீடியோ.. திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
1725Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் கலக்கி வருபவர் நடிகை நயன் தாரா. ஐயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய உழைப்பால் பெரிய இடத்தினை சினிமாத்துறையில் பதித்தவர் நடிகை நயன்தாரா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருடங்கள் முழுவதும் பிஸியாக இருந்து வருகிறார்.

நடிகைகள் என்றாலே பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்கத்தான் செய்யும். அதில் பல்வேறுபட்ட வதந்திகளையும், கிசுகிசுக்களையும் சந்தித்தவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த நானும் ரெளடிதான் படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அவருடன் ஒன்றாக பல ஆண்டுகள் சுற்றி வருகிறார்.

இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக செல்வது புகைப்படங்களை சமுகவளைத்தளத்தில் பதிவிடுவதுமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷுடன் முதன் முதலில் டிக்டாக் வீடியோ ஒன்றினை பதிவிட்டு வைரலாக்கியுள்ளார் நயன்தாரா.

தற்போது கொரானா வைரசால் அச்சப்பட்டு இருக்கும் சூழலில் நடிகை நயன் தாராவின் ஹாஸ்டேக்கோடு இருவரும் செய்த டிக்டாக் வீடியோ பரவி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சிலர் இந்த நேரத்தின் இதுதான் முக்கியமா என்று கேள்விகேட்டு திட்டி வருகிறார்கள்.