அடியே.. சோறு நீயா போடுவ.. கொரானா டிவிட் போட்ட நடிகையை கேவளமாக திட்டிய நபரால் பரபரப்பு..

Report
1370Shares

உலகையே ஆடிப்படைக்கும் ஒரு சொல் கொரானா. சீனாவில் துவங்கி தற்போது உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்து வருகிறது. சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புள்ளான நிலையில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பல நாடுகளில் கொரானா வைரசை தடுப்பது எப்படி என்று யோசித்து வரும் நிலையில் சில நாடுகள் ஊரடங்கை பின்பற்றி வருகிறது. இத்தாலியில் உயிர்பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கும் சூழல் இருப்பதால் உலகமே அச்சத்தில் இருக்கிறது.

தற்போது 21 நாட்கள் இந்தியாவில் 144 தடை உத்திரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். இதனால் அந்ததந்த மாநிலத்தில் பல தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்படு வருகிறார்கள். 144 தடை போட்டபோதொலும் சிலர் ஊர்களை தேவையின்றி சுற்றித்திருந்து வருகிறார்கள்.

நோய்தொற்றுவை தடுக்கவே இப்படியான தடை உத்திரவை போடபட்டிருக்கிறதை பலர் மறந்துவிடுகிறார்கள். தற்போது இந்தியாவில் காட்டுத்தீயாய் பரவிவரும் கொரானாவிற்கு 649 பேர் பாதித்துள்ள்னர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை எதிர்த்து சிலர் விழிப்புணர்வு வீடியோக்களை சமுகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். பிரபலங்களும் அதற்கான சமுக விழிப்புணர்வை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் மலையாள தமிழ் இளம் நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். கொரானா பற்றி டிவிட் செய்த மஞ்சிமாவிற்கு சிலர் கேவளமாக கருத்துக்களை பதிலளித்துள்ளது சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஏன் அரசு சொல்வதை கேட்காமல் வெளியில் செல்கிறீர்கள், வீட்டிலேயே இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு ஒரு நபர் அடியே குந்தாணி சோறு நீயா போடுவ என்று கேவளமாக திட்டியுள்ளார்.

இதை பார்த்த சிலர் அந்த நபரை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

45318 total views