பெண்குழந்தை பிறந்ததை யாருக்கும் சொல்லி கொண்டாடாத ஆல்யா மானசா.. காரணம் இதுதானா?

Report
634Shares

தொலைக்காட்சி சீரியல்கள் தற்போது சினிமா படத்தினை போன்று கதையும், திரையும் அமையும். அந்தவகையில் சீரியலின் பெயர்களும் சினிமா பெயரை வைத்தே ஒளிப்பரப்பப்படுகிறது. அதில் மக்கள் மனதை பெரியளவில் வரவேற்பை பெற்ற சீரியல் ராஜா ராணி. நடிகர் சஞ்சீவ், நடிகை ஆலியா மானசா ஜோடிகளாக நடித்திருந்தார். சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தது நிஜத்திலும் நல்ல ஜோடியாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர்.

இதை இருவரும் உறுதிபடுத்தும் விதமாக காதலித்து வெளியில் சென்றும் சுற்றி வந்தனர். இருவரும் சில நாட்களிலேயே காதல் ஏற்பட்டு நிச்சயர்தார்த்தமும் செய்து கொண்டனர். இருவரின் வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் யாருக்கும் கூறாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ரகசியமாக நடந்தாலும் திருமண வரவேற்ப்பும் மானசாவின் நெலங்கு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கர்ப்பமாக இருக்கும் மானசாவிற்கு குழந்தை பிறக்கபோகும் நிலையில் கொரானா வைரஸ் தற்போது பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மானசா சஞ்சீவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மானசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளது, ~நாங்கள் எதிர்ப்பார்த்தது போல பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை நாங்கள் கொண்டாடும் நிலையில் இல்லை. ஏனென்றால் கொரானா வைரசால் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் கொரானாவிற்கு எதிரான நடவடிக்கைகள் போரை போன்று இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், போர் காளத்தில் எங்கள் மகள் பிறந்திருப்பது கடினமாக இருந்தாலும் பிறந்த நொடியே போருக்குத் தயாராகியிருக்காள் என்று கூறி நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் மானசாவும் சஞ்சீவும்.