கொரானாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கம் இழுத்த நடிகை சன்னிலியோனி.. வைரலாகும் புகைப்படம்..

Report
412Shares

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக தற்போது கவர்ந்து வருபவர் நடிகை சன்னி லியோனி. ஹாலிவுட் சினிமாவில் அந்தமாதிரியான படத்தின் நடிகையாக இருந்து சில காரணங்களால் அதிலிருந்து வெளியே வந்தார். அதன்பின் 2011ல் இந்தியாவிற்கு வந்த சன்னி லியோனி சில பாலிவுட் படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வந்தார்.

அதன்பின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்று வருகிறார். தன் கவர்ச்சியாலும் நடிப்பாலும் இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இருவரும் இணைந்து மூன்று குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தனர். பாலிவுட்டின் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சன்னி லியோனி சமீபகாலமாக உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரானா வைரஸால் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்து கொண்டே மராத்தியப் பாரம்பரியத்தின்படி சேலையணிந்து பிள்ளையார் சிலையை கும்பிட்டு புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தால் ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.