தவறாக நடந்து கொண்ட நடிகரை கேரவனுக்குள் அழைத்து சென்ற நடிகை.. ஓப்பன் டாக்

Report
794Shares

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தின் மூலம் நடித்தவர் நடிகை பிரகதி. இதன்பின் 19934ல் பாக்யராஜுடன் வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு படங்களையே அதிகமாக நடித்து வந்தார்.

இதைதொடர்ந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த பிரகதி தார தப்பட்டை, இனிமே இப்படித்தான், கெத்து போன்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் அரண்மனைக்கிளியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று வருகிறார். லாக்டவுனால் மகன்களுடன் இருந்து நேரத்தை செலவிட்டு வரும் பிரகதி, தனியார் இணையத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

படத்தில் நடித்து கொண்டிருந்த போது மூத்த காமெடி நடிகருடன் நடித்த காட்சியின் போது அவரின் பார்வை செயல் பாலியல் ரீதியாக என்னை பாதித்தது. இதை பெரிதளவில் உணர்ந்தபின், காமெடி நடிகரை என்னுடைய கேரவனுக்குள் அழைத்து சென்றேன்.

நீங்கள் என்னிடம் நடந்து கொள்வது தவறான முறையில் உள்ளது என்று கூறினேன். உடல் மனம் அளவில் உங்களை அப்படியான முறையில் அனுகினேனா? இதை மற்றவர்கள் முன் கேட்டு இருந்தால் உங்களின் மரியாதை போய்விடும் என்று நினைத்து தான் உங்களை தனியாக கூப்பிட்டேன் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பிறகு அவர் அப்படியான கண்ணோட்டத்தில் நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இப்படி ஒரு மூத்த காமெடி நடிகர் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.