படவாய்ப்பில்லாமல் காணாமல்போன எஸ்.ஜே.சூர்யா பட நடிகை மீரா.. கத்திமுனையில் மாட்டிய தந்தையால் பரபரப்பு..

Report
318Shares

தமிழ் சினிமாவில் எஸ்..ஜே சூர்யா நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அதன்பின் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிஸியான நடிகையானார்.

இதன்பின் இந்தியில் மீரா நடித்த செக்‌ஷன் 375 மிகப்பெரிய வெற்றித்தந்தது. இதனால் தமிழ் படங்களில் வாய்ப்பில்லாமல் டெல்லியில் செட்டிலானார். தற்போது கொரானா சமயத்தில் வீட்டில் தன் உறவினர்களுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.

மீரா சோப்ரா பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினராவார். இந்நிலையில் நேற்று காலை அவரது தந்தை தங்களுடைய போலிஸ் கோட்ரஸிலிருந்து நடந்து கொண்டிருந்துள்ளார். திடீரென இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கத்தியினை காட்டி மொபைல் போனை திருடி சென்றுள்ளனர்.

உடனடியாக பாதுகாப்பு ஆணையருக்கு தெரியப்படுத்தியுள்ளார் மீரா சோப்ரா. இதை அவரது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் என்னுடைய தந்தையின் இந்த சம்பவத்திற்கும் வெளிநாட்டில் இருக்கும் என் உறவினர் ப்ரியங்கா சோப்ராவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவரை ஏன் இதில் இழுக்கிறீர்கள் என்று திட்டியுள்ளார்.

ஏற்கனவே கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகை தந்தைக்கு இப்படி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


View this post on Instagram

Sombre day!

A post shared by Meera Chopra (@meerachopra) on