குளிப்பதை காட்டுவதை போன்று உடை மாற்றுவதை காட்டலாமே.. சர்ச்சையை ஏற்படுத்திய விஜய் சேதுபதி..

Report
196Shares

பிரபலங்கள் என்றாலே பல சர்ச்சைகளையும், வதந்திகளையும் கிசுகிசுக்களையும் சந்திக்க நேரிடும். கருத்து, தத்துவம் என்ற பெயரில் சிலர் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் பிரபல நடிகை ஜோதிகா சமீபத்தில் நடந்த விருதுவிழாவில் தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்த செய்தி சில மாதங்களுக்கு பிறகு வைரலாக்கினர்.

அதேபோல மாட்டி கொண்டவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் போது கோவிலில் சாமிகளை குளிப்பாட்டுவதை காட்டுவார்கள். அதேபோல் ஏன் ஆடை மாற்றுவதை காட்டமாட்டார்கள் என்று சிறு கதையாக மேடையில் கூறினார்.

தற்போது இந்த செய்தி வைரலாகி விஜய்சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது, `கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் போது விக்ரகங்கள் கடவுளிடம் இருக்கும். அபிஷேகம் முடிந்த பின் திரையை மூடிவிட்டு தான் புத்தாடை அணிந்து அலங்காரம் நடக்கம். இந்து மக்களின் கலாச்ச்சாரம் தெரியாமல் தத்துவம் என்ற பெயரில் வாய்விட கூடாது என்று கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.