தவறாக நடக்க முயன்ற பிரபல தயாரிப்பாளர்.. மேடையில் உண்மையை உடைத்த நடிகை ஸ்ருதி..

Report
223Shares

சினிமாத்துறையில் நடிகைகளுக்கு பல வழிகளில் துன்பங்களும் கசப்பான சம்பவங்களும் நடக்கும். அந்தவகையில் சமீப காலமாக பல நடிகைகள் ஓப்பனாகவே திரைத்துறையில் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசுகின்றனர். பாலியல் தொந்தரவு சம்பந்தமாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பெரிய பங்கு வகிக்கிறது மீ டூ.

சில ஆண்டுகளுக்கு முன் தனியார் பத்திரிக்கை நிறுவனம் நடத்திய ‘செக்ஸிசம் இன் சினிமா’என்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகைகள் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கலந்துகொண்டு பேசினர். நெருங்கிவா முத்தமிடாத, நிலா, நிபுணன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் சுருதி.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ருதி ஹரிஹரன், தனக்கு 18 வயதில் கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது, எனக்கு பாலியல் தொந்தரவு நடந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பட தயாரிப்பாளருடனும் அவருடம் சேர்ந்து 4 பேருடன் ஒத்துழைக்குமாறு கேட்டார். இதுபோன்ற பல இடங்களில் நடந்தது என்று கூறினார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு, தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. தற்போது திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார்.

நிபுணன் என்ற படத்தில் நடிகர் அர்ஜுன் தான் இப்படி நடந்து கொண்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.