கையில் குழந்தையுடன் விரையில் அம்மாவாகப் போகும் லேடி சூப்பர் ஸ்டார்.. காதலன் வெளியிட்ட புகைப்படம்..

Report
817Shares

மலையாளம், தமிழ் மொழிகளில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நயன் தாரா. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி பின் ஐய்யா படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து பிஸியாக வருகிறார். தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து முன்னணி நடிகர்கள் படத்திலும், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து புகழ் பெற்று வருகிறார்.

சினிமாவில் பல கிசுகிசுக்கள் பேசப்பட்டாலும் வெளிப்படையாக சிம்பு, பிரபுதேவா உள்ளிட்டவர்களுடன் காதலில் விழுந்து பின் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து தான் நடித்த நான் ரெளடிதான் என்ற படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன் தாரா.

தற்போது இருவரும் உலகத்தில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று ஊர்சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினத்தினை கொண்டாடியது. தன் காதலருடன் வெளிநாட்டில் இருக்கும் நயன்தாரா கையில் குழந்தையுடன் கடற்கரையில் இருந்து புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வருங்காலத்தில் என் குழந்தைக்கு தாயாக காத்திருக்கும் என் மனைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இப்பதிவால் திருமணம் கூடிய சீக்கரமே என்று மறைமுகமாகி கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து புகைப்படத்தினை வைரலாக்கி வருகிறார்கள்.