என் உடற்கட்டுக்கு அப்படிபட்ட படங்கள் செட்டாகாது.. ப்ரியா பவானி சங்கர் ஓப்பன் டாக்..

Report
171Shares

பெரும்பாலான பிரபலங்கள் சினிமாத்துறையில் இருந்துதான் சின்னத்திரைக்கு நடிக்க செல்வார்கள். தற்போதைய நிலையில் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலங்களாக மின்னி வருகிறார்கள். அந்தவகையில் தொலைக்காட்சி நிகழ்வுகள் மூலம் பிரபலமானவர்களான சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோசங்கர், டிடி, ரம்யா போன்றவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை சீரியல்களில் நடித்தவர் ப்ரியா. அதன்பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தினை பெற்றார்.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் `மான்ஸ்டர்` படத்தில் நடித்து கிசுகிசுக்களுக்கு ஆளானார்.

இதையடுத்து சர்ச்சைகளுக்கு மத்தியில் மாபியா படத்தில் மாடர்ன் பெண்ணாக களமிரங்கி நடித்து வந்தார். தற்போது மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவின் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் கவர்ச்சி பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ப்ரியா பவானி சங்கர், `கவர்ச்சியாக நடிப்பதற்கு நான் ஒருபோதும் ஏற்க்கமாட்டேன். அப்படியான கதாபாத்திரங்கள் எனக்கு செட்டாகாது. அதற்கான உடற்கட்டும், முகமும் இல்லை. கவர்ச்சியாக நடிக்க பல படவாய்ப்புகள் வந்தன. நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தேன் என்று கூறியுள்ளார்.