சூப்பர் ஸ்டார் செய்த செயலால் கதறி அழுத சரத்குமார்..வைரலாகும் வீடியோ..

Report
961Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக 80, 90களில் கொடிகட்டிப் பறந்தவர் சரத்குமார். நாட்டாமை, சூர்ய வம்சம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து நீங்கா இடம் பிடித்தவர். இதையடுத்து சாயா சரத்குமார் என்பவரை திருமணம் செய்து பூஜா, வரலட்சுமி என்ற இருமகளை பெற்றார். நக்மாவுடன் சில ஆண்டுகள் காதலில் இருந்ததால் மனைவி சாயா விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஒரு மகனை பெற்றார் சரத்குமார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருவரும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

கொரானா லாகடவுனால் வெளியில் செல்ல முடியாத சூழலில் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார் சரத்குமார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சரத்குமார் பிரபல தெலுங்கு தொலைக்காட்சிக்கு நேரலையில் பேட்டி கொடுத்துள்ளார்.

சினிமா அனுபவங்களை தன் மனைவியுடன் சேர்ந்து கூறிய சரத்குமார் ஒரு கட்டத்தில் கதறி அழுதுள்ளார். தான் அந்த நேரம் பணக்கஷ்டத்தில் இருந்தேன். அப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி காருவுடன் படப்பிடிப்பில் சந்தித்து பேசினேன். அப்போது நான் பட்ட கஷ்டங்களை கூறி படத்தின் கதையை கூறினேன்.

கதையை கேட்டு முடித்ததும் பண்ணிவிடலாம் என்று ஒப்புக்கொண்டார். சம்பளம் பற்றி கேட்டதும், அதெல்லாம் பார்த்து கொள்ளலாம் படத்தை ஆரம்பியுங்கள் என்றார்.

ஒரு சூப்பர் ஸ்டார் இப்படி நடந்துகொண்டது எவ்வளவு பெரிய மனது அவருக்கு என்று கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தற்போது அந்த வீடியோ சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது.