பிரபல நடிகை டாப்சிக்கு திருமணமா?..வைரலாகும் காதலனின் புகைப்படம்..

Report
95Shares

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனிஷிற்கு ஜோடியாக ஆடுகளம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானசர் நடிகை டாப்சி பன்னு. இதன்பின் அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்து பிரபலமானார். தமிழ் படங்களில் நடித்து வந்த டாப்சி தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

சமீபத்தில் இவரும் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து இந்தியில் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்து, அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை உருவாகி நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தி பற்றி பேசுவதில் நான் தென்னிந்திய நடிகை தமிழ், தெலுங்கு கூட பேசுவேன் என்று பதிலடியாக பேசியது வைரலானது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நான் ஒருவரை காதலித்து வருகிறேன் என்று உண்மையை கூறியுள்ளார். டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்யாஸ் போயே என்பவ்ரை காதலில் இருப்பதாகவும், அந்த விஷயம் என் பெற்றோர்களுக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் காதலில் இருப்பதை கூறுவதை பெருமையாக நினைக்கிறேன். என் பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் கூடிய சீக்கிரம் திருமணம் என்று கூறியுள்ளாராம். தற்போது டாப்சி அவர் காதலித்து வந்த காதலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.