காதலுக்காக உடலை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் போன பல்வாள் தேவன்.. வைரலாகும் காதலி புகைப்படம்..

Report
836Shares

தமிழ் சினிமாவில் பெங்களூர் டே, அஜித்தின் ஆரம்பம், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் ராணா டகுபதி. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பாகுபலி படத்தில் பல்வேள் தேவன் கதாபாத்திரத்தில் படத்தின் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக படுமோசமாக உடலை கட்டுகோப்பாக வைத்து முரட்டுதனமானவராக காணப்பட்டார்.

இதையடுத்து உடல் எடையை முற்றிலுமாக குறைத்துள்ளார். இவரா நம்ம பல்வாள் தேவன் என்று ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்க்கும் அளவிற்கு விளம்பரத்தில் நடித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நம்ப முடியாத அளவிற்கு ஏன் இப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த அதிர்ச்சி முடியாத நிலையில் நடிகர் ராணா, தான் காதலித்து வந்த காதலியான மிஹீகா பஜாஜ் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அனுஷ்கா, த்ரிஷா காதல் என சர்ச்சையில் சிக்கி கிசுகிசுக்கு ஆளான ராணா தற்போது காதலியின் புகைப்படத்தோடு என் காதலை ஏற்றுக்கொண்டார் என்று சமுகவலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார்.

ஹைதராபாத்தில் இண்டீரியர் டியூ ட்ராப் டிசைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் மிஹீகா பணியாற்றி வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

View this post on Instagram

And she said Yes :) ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on