சேது படத்தில் நடித்த அபிதாவா இது.. அப்படிபட்ட படங்களில் நடித்துள்ளாரா?..வைரலாகும் புகைப்படம்..

Report
1832Shares

தமிழ் சினிமாவில் 1997ல் வெளியான எட்டுப்பட்டி ராசா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அபிதா. மலையாள சினிமாவில் அறிமுக நடிகையாக இருந்து நடிகர் விக்ரமின் சேது படத்தில் அபிதா குச்சலாம்பால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து கவர்ச்சி நிறைந்த படங்களில் படுமோசமான காட்சிகளில் நடித்தும் வந்தார். படவாய்ப்பில்லாமல் நடித்தபடங்கள் நல்ல வரவேற்பை பெறாததால் சில மோசமான படங்களில் நடிக்க நேர்ந்துள்ளார். ஆனால் நடிகர் அஜித்தின் சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க இவர்தான் முதலில் பேசப்பட்டு இருந்தார். சில காரணங்களால் சிட்டிசன் படத்தில் அஜித்துடன் நடிக்காமல் போனது.

அப்படத்தில் நடித்திருந்தால் நானும் அப்போது முன்னணி நடிகைகள் பட்டியலில் இருந்திருப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். சீரியலில் மிகவும் பெரிய திருப்புமுனையாக இருந்தது திருமதி செல்வம். நடிப்பு திறமையை இந்த சீரியலில் காமித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இரு பெண் குழந்தைகளோடு கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

பிரபல தொலைக்காட்சி தொடரான லட்சுமி ஸ்டோர் சீரியலில் தற்போது டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.