சர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவை பின்பற்றும் முன்னணி நடிகைகள்.. கோடிகளுக்கு ஆசைப்படும் நிலையா?

Report
2475Shares

கொரானா லாக்டவுனால் அனைத்து துறையில் பணியாற்றுபவர்களும் பாதித்தும், அன்றாட வாழ்க்கையை இழந்தும் பணத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதில் சினிமாத்துறையில் வேலை செய்யும் அனைவரும் பாதித்து வரும் நிலையில் பிரபலங்கள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பட ரிலீஸிற்காக பல படங்கள் காத்திருக்கும் சூழலில் சமீபத்தில் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் வெளியீடு பற்றி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் நடித்த இப்படம் டிஜிட்டல் முறையில் சூர்யாவிற்கு சொந்தமான 2டி நிறுவனம் தயாரித்து அமேசான் நிறுவனத்திற்கு 9 கோடிகளுக்கு விற்றுள்ளது. அமேசான் நிறுவனம் நேரடியாக வாங்கியதால் டிஜிட்டல் முறையில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையரங்கில் கொண்டுவர மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்கள்.

இதையடுத்து பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெளியாக இருந்த நிலையில் ஓடிடி-யில் வெளியிட படக்குழுவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், நடிகை அனுஷ்கா, மாதவன் நடித்த நிசப்தம் படமும் ஆன்லைனில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்படியாக படங்கள் கோடிகளுக்கு ஆசைப்பட்டு பிரபல நடிகைகளே இப்படி செய்தால் நாங்கள் எங்கே செல்வோம்? என்றும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கினால் உரிமையாளர்களின் நிலை எங்கே போகும் என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.