
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் சீரியல் தொடர்கள் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். கடந்த சில நாட்களாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் இவர்.
அவரை சுற்றி பல வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவுடன் காதல் என்று வதந்தி பரவியது. மேலும் கல்லூரி கால நண்பரை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தமிழில் கவிதை ஒன்றை எழுதியிருந்தார். பெளர்ணமி இரவு! போன வருஷம் இதே நாள். கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்னு
ஃபிரெண்ட் சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பெளர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது.
இரண்டு சித்ரா பெளர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு. நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை.
தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்?
கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பெளர்ணமி. மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து நடிகை பிரியா பவானி சங்கரின் பதிவை பார்த்தவர்கள் ப்ரேக் அப் ஆகிவிட்டதா என்று கேள்வி கேட்டும் கேலிசெய்தும் வருகிறார்கள்.