மணிவண்ணன் இறந்த 2 மாதங்களே மரணித்த மனைவி.. மகள் மகன் குறித்து யாரும் அறியப்படாத நிலை..

Report
3154Shares

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் பாரதிராஜாவுடன் உதவி இயக்குநராக பணியாற்றி அறிமுகமானவர் நடிகர் மணிவண்ணன். பாரதிராஜாவின் உதவியாலும் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தினை இயக்கி அப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

நடிப்பு, இயக்கம், திரைகதையாசிரியர் என பல பணிகளை செய்து பிரபலமானார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் அனைவருடனும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர். கடைசியாக நடிகர் சத்யராஜின் அமைதிப்படையின் 2 பாகமான நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ என்ற படத்தினை வெளியிட்டார்.

செங்கமலம் என்பவரை திருமணம் செய்து ரகுவண்ணன் என்ற மகனையும், ஜோதி என்ற மகளையும் பெற்றெடுத்தார். இதையடுத்து தன்னுடைய மகன் ரகுவண்ணனை சினிமாவில் அறிமுகமும் செய்து வைத்தார்.

கடந்த 2013 ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாட்களில் மரணமைடந்தார் மணிவண்ணன்.

கணவன் இறந்ததை ஈடுகட்ட முடியாமல் தினமும் மணிவண்ணன் இறந்ததையே நினைத்து உணவு அருந்தாமல் அடுத்த இருமாதங்களில் உடல்நலக்குறைவால் இறந்தார்.

செங்கமலம் தன் கணவருக்கு மனைவியாக இல்லாமல் தாயாக இருந்து பார்த்து வந்தார் என்று நடிகர் சத்யராஜ் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இதையடுத்து மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் ஸ்டெபி என்ற சினிமா பிரபலத்துடன் சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.