பேட்ட பட நடிகரின் சந்தேகத்தால் விவாகரத்தில் முடிந்த திருமணம்.. மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணமா?

Report
274Shares

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வில்லன் நடிகராகவும் திகழ்ந்து பல விருதுகளை வென்றவர் நடிகர் நவசுதின் சித்திக். பல படங்களில் நடித்து வரும் நவசுதின் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

தற்போது வெப்சீரிஸிலும் நடித்து பீக் நடிகர் பட்டியளில் இணைந்துள்ளார். இவருக்கு கடந்த 2009ல் ஆலியா சித்திக் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

திருமணமாகி பத்து வருடங்கள் ஆனநிலையில் விவாகரத்து கோரி புகார் அளித்துள்ளார். இதுபற்றி சமீபத்தில் அவரது சமுகவலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில், நானும் பிரபல பத்திரிக்கையாளரான பியூஷ் பாண்டேவுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சில புகைப்படங்கள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை. ஊடகங்கள் என் பெயரை களங்கப்படுத்துவதாக எண்ணி வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

மேலும் எனக்கும் எந்த நபருடனும் எந்தவொரு உறவும் கிடையாது. சித்திக்கின் குடும்பத்தை பற்றி ஊடகம் முழுவதும் தெரிந்து கொண்டு செய்தியை வெளியிடுங்கள் என்றும் கூறியுள்ளார். என் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியே யோசித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி ஊடகவியலாளர் ப்யூஷ் சித்திக்-ஆலியா விவாகரத்து பற்றி கூறியுள்ளார். நான் சில ஆண்டுகள் சித்திக்குடன் பணியாற்றி அவர் படங்களின் வெற்றிக்கு பணியாற்றியுள்ளேன். இதுபோன்ற தவறான விமர்சனங்கள் என்மீது வீன் பெயரை கெடுக்கவே உருவாகியுள்ளது.

இதன்மூலம் சித்திக்கிடமிருந்து விலகி இருக்கிறேன்.