விவாகரத்தான ஒராண்டில் இரண்டாம் திருமணம் செய்த கணவர்.. சோகத்தில் சீரியல் நடிகை மேக்னா..

Report
669Shares

சினிமாவில் பெரும்பாலானோர் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர்கள் தான். அந்தவகையில் மலையாள சின்னத்திரை நடிகையாக இருந்து அதன்பின் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருப்பவர் மேக்னா வின்செண்ட்.

டிவி தொடர்கள் மட்டுமின்றி பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்திலும் மேக்னா நடித்திருக்கிறார்.

இதையடுத்து டான் டோனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்துள்ளனர். இதையடுத்து திருமணமான சில வருடங்களே இருவருக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதனால் இருவரும் விவாகரத்து பெற்று நடிகை மேக்னா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். விவாகரத்திற்கு காரணம் நடிகை மேக்னாவில் நடவடிக்கை தானாம்.

இந்நிலையில் விவாகரத்து பெற்ற ஒராண்டிலேயே டான் டோனி இரண்டாம் திருமணத்திற்கு தயாராகி கிளாரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி அவர் கூறியது, ``எங்கள் திருமணம் லாக்டவுன் என்பதால் பிரம்மாண்டமில்லாமல் நடைபெற்றதாக கூறினார். இதனால் தான் யாருக்கும் அறிவிக்கப்படாமல் இருந்தேன் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.