தல தான் என்னுடைய ஃபேவரேட் ஆனால் அவர் இல்லை.. வெளிப்படையாக கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினி..

Report
2211Shares

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் உலக தமிழ் உள்ளங்களை கவர்ந்து தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் பாலச்சந்திரத்தின் அறிமுகத்தால் தமிழ் சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட ரஜினி 60 வயதிற்கு மேலும் பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்கத்தில் தலைவரான நாசர், விஷால் தலைமையில் கிரிக்கெட் விளையாட்டினை மையமாக வைத்து நட்சத்திர விழாவை நடத்தி இருந்தது. அதில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் முழுவதும் கலந்து கொண்டனர். நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.

அப்போது கிர்க்கெட் வீரர்களாக சினிமா நட்சத்திரங்களின் அறிமுக விழா நடைபெற்றது. அப்போது ரஜினியிடம் நடிகர் சிவா உங்களில் ஃபேவரட் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிரிப்புடன் பதிலளித்த சூப்பர் ஸ்டார், இன்று நான் ரொம்பவும் விரும்புவது எம்.எஸ். தோனி தான். ஆனால் ஆல் டைம் ஃபேவரட் சச்சின் டெண்டுல்கர் தான் என்று கூறினார். அவர் கூறியது அரங்கில் இருந்தவர்கள் உற்சாகத்தில் கூச்சளிட்டனர்.