அஜித்தின் முன்னாள் காதலி நடிகை ஹீரா இல்லை இவர்தானாம்?...உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

Report
6515Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் பல ரசிகர்களின் பட்டாளத்தை வைத்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் படம் என்றாலே திருவிழா கூட்டம் போல் திரையரங்கில் ரசிகர்கள் குவிவார்கள்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் பணியாற்றி நடித்து வரும் அஜித் பல கஷ்டங்களை கடந்து இந்த இடத்தினை பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஷாலினியை காதலித்து கரம்பிடித்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது தெரியும். ஷாலியை காதலிப்பதற்கு முன் பல நடிகைகளிடன் காதலில் இருந்ததாக பல கிசுகிசுக்களும் வதந்திகளும் பரவியது.

சமீபத்தில் இவர் காதலித்த ஹீராவின் நிலை பற்றி வைரலானது. அதேபோல் கடந்த மே1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்தி வீடியோவும் மெசேஜ்ஜும் செய்து வந்தனர். தல அஜித்தை பற்றி அவருடன் பணியாற்றிய நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் காதல் குறித்த சிலவற்றை வெளிப்படையாக கூறியிருந்தார்.

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்வதற்கு முன் அவருடன் சில படங்களில் நடித்த ஹீராவை காதலித்து வந்ததாகவும் பின் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதற்கு முன் பானுமதி படத்தில் நடித்த சுவாதி என்பவரை காதலித்து அவர் வீட்டிற்கு பெண் கேட்டு போனதாகவும் கூறியுள்ளார். மேலும் சுவாதியின் தாயார் என் மகள் நடிக்க வேண்டும் திருமண முடிவு இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து கரம்பிடித்துள்ளார்.