அந்த நடிகை ஆரம்பித்ததை நான் ஏற்கவே மாட்டேன்.. OTT தளத்தை எதிர்க்கும் பிரபல இயக்குநர்..

Report
48Shares

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குநர் இடத்தில் இருந்து வருபவர் இயக்குநர் முருகதாஸ். படங்களை இயக்குவதை விடுத்து படத்தினை தயாரித்தும் வருகிறார். மேலும் தயாரிக்கும் முதல் வெப்சீரிஸில் கதாநாயகியாக நடிகை வாணிபோஜன் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்துக் கவனம் பெற்றார் வாணி போஜன். பல படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

முருகதாஸின் உதவி இயக்குநர்களான எங்கேயும் எப்போதும் (சரவணன்), ரங்கூன் (ராஜ்குமார் பெரியசாமி) ஆகிய படங்களையும் முருகதாஸ் தயாரித்துள்ளார். இதையடுத்து இந்த வெப்சீரிஸையும் அவர்கள் இயக்கி முருகதாஸ் தயாரிக்கிறார்.

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. கொரானா லாக்டவுனால பட வெளியாகுவதில் தாமதமாகி வருகிறது

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ராங்கி என்ற படத்தையும் தயாரித்து வரும்நிலையில் அப்படத்தின் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட பிரபல OTT தளம் ஒன்று கேட்டுள்ளது.

ஆனால், முருகதாஸ் முடியவே முடியாது படம் முதலில் திரையரங்கில் தான் ரிலீஸ் ஆகும் என்று மறுத்துவிட்டாராம். சமீபத்தில் OTT தளத்தில் வெளியிட நடிகை ஜோதிகா ஆரம்பித்து வைத்த நிலையில் பல நடிகைகளின் படங்களும் OTT தளத்தில் வெளியிட தாயாராகியுள்ளது.

இப்படி OTT தளத்தில் வெளியிட்டால் நாங்கள் எதற்கு என்று பட உரிமையாளர்களும், வினியோஸ்தரர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள்.