அதற்கு மறுத்து முடியாது என கூறியதால் 3 ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட நடிகை!.. ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா.

Report
1283Shares

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக நடித்து பின் எந்த கதாபாத்திரம் என்றாலும் நடிக்க ஆர்வமாய் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது சினிமா நடிகையாக வலம் வந்தாலும் ஒரு காலத்தில் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிள் நடனமாடி இதன்பின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, காக்கா முட்டை, வட சென்னை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனியார் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், `குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக எடுத்த கஷ்டங்களும் அனுபவங்களையும் கூறியுள்ளார்.

என்னுடைய நிறம், தோற்றத்தின் காரணமாக சினிமாவில் பலமுறை கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகி அவமானப்படுத்தப்பட்டேன்.

மற்ற நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் எனக்கு நடந்தது. அதை எதிர்கொண்டாலும் அவற்றை எப்படி கையாள்வது என்பது தனக்கு தெரியும்.

நடிகையாகும் தகுதி எனக்கு இல்லை என்றும், வேறு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் பல முன்னணி இயக்குனர்கள் கேலி செய்து வந்தனர்.

ஆரம்ப காலத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கும் படி கேட்டார்கள். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு கதாநாயகிக்கு வேலையே இல்லை என்பதால் நடிக்க முடியாது என ஒரே வார்த்தையில் கூறி விட்டேன்.

இதனால் மூன்று ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.