ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கமல் பட நடிகை அபிராமி!.. வைரலாகும் புகைப்படம்..

Report
2703Shares

80களில் வெளியான குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அபிராமியாக மாற்றிக் கொண்டவர் நடிகை அபிராமி.

மலையாள படங்களில் நடித்து வந்த அபிராமி விருமாண்டியில் கமல் ஜோ‌டியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது. இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த அபிராமி படிப்பிற்காக அமெரிக்காவில் செட்டிலானார். அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு மிகப்பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக வேலை செய்திருக்கிறார் அபிராமி. அங்கு படித்து வேலை பார்த்துள்ளார்.

சில ஆண்டுகளில் படிப்பு முடித்து சின்னத்திரையில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். விருமாண்டி படத்தில் கமலின் நாயகி அபிராமி நாயகியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள அபிராமி, கமல் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்போன் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார். அதன்மூலம் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் வசனம் பேசியுள்ளார்.

ஆனால், விருமாண்டிக்குப் பிறகு அபிராமிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், எப்படி இருந்த அபிராமி இப்படி ஆகிட்டாரே..? என்று ஷாக் ஆகித்தான் வருகிறார்கள்.