நம்ம பசங்க சோபிகண்ணாக நடித்த நடிகை வேகாவா இது?.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
475Shares

இளம் நடிகைகள் சிலர் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயரை கொடுத்து விட்டு படவாய்ப்பில்லாமல் சென்று விடுவார்கள்.

அந்தவகையில் 2009ல் வெளியான பசங்க திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வேகா. இப்படத்தை சசிகுமார் தயாரித்து அறிமுக இயக்குனராக பாண்டிராஜ் இயக்கி வெற்றிபெற்ற படம் தான் பசங்க.

நடிகர் விமலுக்கு ஜோடியா அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார் வேகா. நடிகை வேகா நடிகை மட்டும் இல்லாமல் ஒரு மாடலாக வளம் வளர்ந்தவர்.

சிட்னி நகரத்தில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகத்திலும் அதன் பின்பு பெங்களூர் நகரத்தில் உள்ள ஐ.ஐ.எம். மிலும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார். தற்போது தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் சரோஜா படத்தில் தான் அறிமுகமானார்.

ஆனால் பசங்க படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிவிட்டார். இவரை வேகா எனற்றால் கூட ரசிகர்களுக்கு தெரியாது சோபிகண்ணு என்றால் அனைவருக்கும் தெரியும். தற்பொழுது இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது இதை பார்த்து விட்டு இது சோபிகண்ணா என வியக்குகிறார்கள்.