என்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..

Report
511Shares

மலையாளத்தில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரின் நினைவுகளில் இருப்பவர் நடிகை கல்யாணி என்கிற பூர்ணிதா. ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சிறுமியாக நடித்தவர் கல்யாணி. குழந்தை பருவம் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் கலந்து கொண்டவர் கல்யாணி.

கத்தி, கப்பல், இன்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து நடிகையாகவும் வளம் வந்தார். சில படங்களில் நடிகையாகவும் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த கல்யாணி சில காரணங்களால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

இதையடுத்து திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டு விட்டார். ஆனால் இதற்கான காரணம் திருமணம் இல்லை வேறு ஒன்றுதான் காரணம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நான் சினிமாவில் இருந்து விலகியதற்குக் காரணம் என்னைத் தவறாகச் சிலர் பயன்படுத்தப் பார்த்தார்கள். என் அம்மாவிற்கு போன் செய்து பெரிய ஹீரோ, பெரிய தயாரிப்பாளர் படத்தில் உங்கள் மகள் தான் நடிகையாக நடிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட் மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார். மேலும் படுக்கைக்கு வரவேண்டும் என்று சில இயக்குனர்கள் கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால், என் அம்மா நடிப்பே வேண்டாம் என்று கூறி விட்டார். அதனால்தான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் இதுபோல் சம்பவம் நடந்தது. பிரபல தொலைகாட்சியில் சில நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.

அப்போது, அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் என்னிடம் ஒரு நாள் இரவு நேர பார்ட்டிக்கு வருமாறு கேட்டார். எனக்கு எதுவுமே புரியவில்லை, வேண்டும் என்றால் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்களாமே என்று கூறினேன்.

அவ்வளவு தான் அன்று முதல் என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை தொகுப்பாளினியாக போட்டு விட்டார்கள். மேலும், என்னை மீண்டும் தொலைக்காட்சியில் இருந்து அழைக்கவில்லை.

இப்படி தனக்கு நடந்ததை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கல்யாணி.