அந்த உறவிற்க்காக உடலை நேசிக்கும் மனநோயாளி தான் அவர்.. முன்னாள் காதலன் பற்றி வர்ணித்த நடிகை த்ரிஷா..

Report
8437Shares

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக தன்னுடைய இடத்தினை இன்றுவரை பிடித்து வைத்திருபவர் தான் நடிகை த்ரிஷா. சிறு கதாபாத்திரத்தில் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகைகள் இடத்தினை பெற்றார்.

பல சர்ச்சைகளை சந்தித்து வந்த த்ரிஷா நடிகர் ராணா டகுபதியுடனான காதலும் சர்ச்சையில் பரவியது. ராணா சென்னை வந்தால் த்ரிஷாவின் வீட்டில் தான் தங்குவார் என்று சமீபத்தில் நடந்த விழாவில் கூறியிருந்தார். சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்த சினிமா விழாக்களுக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வந்தனர்.

ஆனால், தாங்கள் நண்பர்கள்தான் என்றும் காதலிக்கவில்லை என்றும் நடிகர் ராணா கூறி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில், "பத்து வருடத்துக்கும் மேலாக திரிஷா எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம். பின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் நடந்து முடிந்து வருடங்கள் ஆன நிலையில், சமீபத்தில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு என் காதலை ஏற்றுக்கொண்டார் என்று சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.

பிரபலங்களுக்கு நல்ல செய்திகள் நடந்தால் முதல் ஆளாக வாழ்த்து சொல்லும் நடிகையாக திரிஷா இருப்பார். தன்னுடைய நெருங்கிய நண்பரான ராணாவின் காதல் பதிவிற்கு வாழ்த்து எதுவும் கூறவில்லை.

அதற்கு பதிலாக அவரது சமுகவலைப்பக்கத்தில் "முன்னாள் காதலியை இந்நாள் நண்பர்களாக வைத்திருப்பவர்கள் "அந்த" உறவிற்காக அவளது உடலை மட்டுமே நேசிக்கும் மனநோயாளிகள் (narcissistic psychopath)" என்று ஒரு பதிவை வெளியிட்டு "இது எனக்கு தெரியும்" என கூறியிருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி காதல் தோல்வியால் தான் இப்படியான பதிவா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.