
தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். அந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளை கவர்ந்து வந்த ப்ரியா இளைஞர்களையும் ஈர்த்து வந்தார்.
இதன்மூலம் கடை குட்டி சிங்கம், மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர், பொம்மை போன்ற படத்திலும் அருண்விஜய்யின் மாஃபியா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் லாக்டவுனால் வீட்டிலேயே இருந்து வரும் ப்ரியா சமீபத்தில் வெளிநாட்டு பயணத்தில் மேற்கொண்ட பயணத்தை நியாபகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது மலைஉச்சியில் பாறை மீது உட்கார்ந்து கொண்டு பயமேதும் இல்லாமல் புகைப்படத்தை எடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.