தாயை இழந்து அவமானப்பட்ட நடிகர் முரளி.. இறப்பிற்கு முன் அவருக்கு இவ்வளவு கஷ்டமா? வைரலாகும் வீடியோ..

Report
288Shares

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் முரளி. வேற்றுமொழி மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் படங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். முரளி அவர்கள் இதுவரையிலும் தமிழில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

இவர் நடித்த படங்கள் கருத்துள்ளவையாக நிறைந்து சமுகத்தில் வெற்றிப்பெற்ற படங்களாக வளம் வந்தன. தனக்கு பின் தன் மகனும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று மகன் அதர்வா முரளியை அறிமுகப்படுத்தினார். இதையடுட்த்து கடந்த 2010ல் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் இழப்பை தென்னிந்திய சினிமாவால் ஜீரணிக்கமுடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் முரளி இறப்பதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்து தன் அனுபவங்களையும் கஷ்டங்களையும் பகிர்ந்துள்ளார். தன்னுடைய தாய் விபத்தால் இறந்ததாகவும் அதன்பின் பல கஷ்டங்களும் அவமானங்களும் சந்தித்து வந்தேன் என்றும் கூறி மனதை உருக வைத்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.