தேசிய விருது பெற்ற பெரிய காக்கா முட்டையா இது?.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிறுவன்..

Report
1187Shares

தமிழ் சினிமாவில் நல்ல கருத்துகளுடன் வெளியாக தேசிய விருதுகள் பெரும் படங்கள் குறைந்து கொண்டே செல்கிறது. அந்தவகையில் முன்னணி நடிகர் தனுஷ் தயாரித்து இயக்குநர் மணிகண்டன் இயக்கி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரு மகன்களின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் காக்கா முட்டை.

சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்ற இரு சிறுவர்களின் அட்டகாசமான நடிப்பால் தான் இப்படம் தேசிய விருதினை பெற்றுத்தந்துள்ளது. தற்போது இருவரும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

தன்னுடைய சிறுவயதில் பெரிய காக்கா முட்டையாக நடித்த சிறுவன் தான் விக்னேஷ். தற்போது ஆள் அடையாளம் தெரியாதபடி வளர்ந்துள்ளார். நடிகர் ஆகும் அளவிற்கு அழகாகவும் உடற்கட்டோடும் திகழும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்காக்கி வருகிறது.

அதில் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் விக்னேஷ். அப்பா படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது சமீபத்திய புகைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஹீரோ போன்று உள்ளதால் வைரலாகி வருகிறது.