எல்லைமீறி ராணுவத்தை அசிங்கப்படுத்திய வெப்சீரிஸ்.. இந்தியாவையே அதிரவைத்த இணையவாசிகள்..

Report
71Shares

சினிமாவை தவிர்த்து தற்போது ஆனைவரையும் கவர்ந்து வருவது வெப் சீரிஸ் படங்கள் தான். யுடியூப்பை போன்று சென்சார் இல்லாமல் படங்களிளை வெளியிடுவது தான் இதன் சிறப்பான அம்சம். அதனால் பலரும் இதனை ஆதரித்து படங்களை எடுத்து வருகிறார்கள்.

படங்களில் சகஜமாக நடிகைகளை கெட்ட வார்த்தைகள் பேசியும், கவர்ச்சியாக நடித்தும் வைத்து வெப் சீரிஸ்களுக்கு விளம்பரம் தேடுகிறார்கள். இதனை ரசிகர்கள் ஆதரவு அளித்தும் வருகிறார்கள்.

தற்போது இதை சாதகமாக எடுத்துக்கொண்டு மத பரப்பாளர்கள் என்று சிலர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக வெப் சீரிஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் காட்மேன் என்ற தமிழ் வெப் சீரிஸ் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை சிலர் தடை செய்ய கோரி புகாரளித்து படத்தை வெளியிட தடுத்துள்ளனர்.

இந்த சர்ச்சை முடிவதற்குள் தற்போது ALT Balaji என்ற நிறுவனம் தயாரித்த XXX 2 வெப் சீரிஸில் இந்திய ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் இந்திய ராணுவ வீரர்களை இழிவுப்படுத்தும் வண்ணம் சில காட்சிகள் அமைந்துள்ளது.

இறந்த ராணுவ வீரரின் மனைவி தனது கள்ள காதலனுக்கு கணவரின் ராணுவ ஆடையை அணிவித்து உறவில் கடுமையாக ஈடுபடும் காட்சி அமைந்துள்ளது.

எல்லைமீறிய காட்சிகள் ராணுவ வீரரையும், அவரது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக இடம்பெற்றிருக்கும் இப்படம் வெளியிட கண்டித்தும், எதிர்த்தும் இணைய வாசிகள் #ALTBalaji_Insults_Army என்ற ஹேஸ்டேக்கை இந்தியளவில் வைரலாக்கியுள்ளனர்.

களவரங்களை தூண்டும் இப்படியான படங்கள் உருவாகாமல் இருக்க சினிமாத்துறையினர் தடுத்து இதற்கும் தணிக்கை குழு அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.