பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா?.. அப்போ விக்னேஷ் கதி என்ன என்று கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
402Shares

தென்னிந்திய சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சாதாரண தொகுப்பாளினியாக இருந்து பின் படவாய்ப்பு மூலம் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

நடிகையாக இருந்தாலும் வதந்திகளுக்கு மிச்சம் வைக்கதவராகவும் இருந்தார் நயன். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவுடன் நடித்த படங்கள் மூலம் இருவரும் காதலித்து வந்தனர். சில காரணங்களால் இருவரும் பிரிந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

இதையடுத்து நயன் தாரா நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தெவாவுடன் காதலில் ஈடுபட்டார். ஒன்றாக சேர்ந்து விருது விழாக்கள், திருமண விழாக்கள் என்று ஜோடியாக சுற்றி வந்தனர். இதன்மூலம் நயன் தாரா கையில் பிரபு என்ற பச்சையும் குத்திக்கொண்டார். இவரிடமும் காதல் பிரச்சனையால் பிரிந்தார்.

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து விரைவில் திருமணம் என்ற நிலைக்கு காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபு தேவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிகை நயன் தாரா இணையவுள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.

இச்செய்தி வெறும் வதந்தியா இல்லை உண்மையா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார். இத்தகவலை உறுதி செய்ய நயன் தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தான் சொல்ல வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.