திருமணமாகி ஓராண்டில் வெளிநாட்டில் தொகுப்பாளினிக்கு நேர்ந்த பரிதாபம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
793Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் தற்போது சினிமாத்துறையில் வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் வில்லு, தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களின் பாடல்களில் பாடி பிரபலமானவர் திவ்யா.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஷிபி தினகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திவ்யா கணவருடன் ரயில் நிலைத்தில் இருக்கும் போது தன்னுடைய லேப்டாப், போன், பணம் மற்றும் அவரது டாக்குமெண்ட் பாஸ்போர்ட் போன்றவற்றை சிலர் கொள்ளையடித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். அதுபற்றி தீர விசாரிக்காமலும் இருந்துள்ளதால் அவரது சமுகவலைத்தளத்தில் கவனமாக இருங்கள், இதுதான் என் அறிவுரை என்று கூறி பதிவிட்டுள்ளார். திருடுபவர்களுக்கு தனிப்பட்ட கொள்கை, உணர்ச்சிகள் எதுவும் இல்லை மற்றவர்களின் இழப்பு பற்றிய நிலையை அறியாதவர்கள் என்று திட்டித்தீர்த்துள்ளார்.