'பலரிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டினார்கள்'.. பாலிவுட் பிரபலங்களை கிழிக்கும் நடிகை கங்கனா வீடியோ..

Report
104Shares

சில தினங்களுக்கு முன் இந்தியா முழுவதும் பலரின் சோகத்தை ஆழ்த்தியது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம். மன அழுத்தத்தால் துக்கிட்டு தற்கொலை செய்தது எதற்காக என்று பலரின் கேள்விக்கு இன்றுவரை பதிலை கண்டுபிடிக்கவில்லை.

சுஷாந்த் இறப்பிற்கு பாலிவுட்டை சார்ந்த பல பிரபலங்கள் தான் காரணம் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு சில பிரபலங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஓன்றை பதிவிட்டு சில திடுக்கிடும் உண்மையை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் கூறியது, சில பிரபலங்கள் என்னை பலரிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டினார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அழிவு பாதைக்கு செல்வாய். தற்கொலையும் செய்து கொல்வாய் என்று கூறினார்கள்.

என்னைபோல் சுஷாந்த் சிங்கையும் கூப்பிட்டு மிரட்டி இருக்கலாம். என்னைபோல் உணர்ச்சிகளை கொட்டிவிடும் மனபலம் சுஷாந்திற்கு கிடையாது. அவரே சில பேட்டிகளில் கூறியுள்ளார். பலர் அவரை வளரவிடாமலும் அவமானப்படுத்தியும் இந்த நிலைக்கு கொண்டு சென்றனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.