பிரபல தொலைக்காட்சி சீரியலில் இருட்டு அறை நடிகை யாஷிகா!.. டி.ஆர்.பிக்காக இவ்வளவு சம்பளமா?..

Report
340Shares

தொலைக்காட்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாத்துறையில் தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில நடிகர் நடிகைகள் படவாய்ப்புகள் கிடைக்காமல் தொலைக்காட்சி பக்கம் திரும்புகிறார்கள். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் ரோஜா.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது புது வரவை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தன்னுடைய க்ளாரான நடிப்பால் கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். தற்போது உடல் எடை குறைத்து லாக்டவுனை உடற்பயிற்சி செய்தும் க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் இவர் ரோஜா சீரியலில் நடித்து வருவதாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரோஜா சீரியல் நாயகனுடன் பைக்கில் செல்லும் காட்சிகள் எடுக்கப்படுள்ளது. இந்த சீரியலுக்காக யாஷிகா 1.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

தொடர்ந்து இந்த சீரியலை தொடர்வாரா? இல்லை சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து செல்வாரா? என்று அதிகார பூர்வமாக தெரியவில்லை. டி ஆர் பிக்காக பிரபல தொலைக்காட்சி சேனல் இப்படியொரு முயற்சி எடுத்திருப்பது ரசிகர்களிடையே ஷாக்காகி வருகிறது.