தற்கொலை செய்துகொண்ட நடிகர் குணாலுக்கும் இப்படிதான் நடந்ததா?.. வெளிச்சத்திற்கு வரும் பலஆண்டு உண்மைகள்..

Report
942Shares

தமிழ் சினிமாவில் காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குணால். இப்படம் காதல் படம் என்றால் இதுதான் என்றும் படத்தின் பாடல்கள், காதல் கதைக்கு ஏற்ற வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசை அழியாத காவியமாக இருக்கும்.

அந்தவகையில் காதலர் தினம் படத்தின் மூலம் பெரியளவில் வருவார் என்று எதிர்பார்த்தவர் நடிகர் குணால். இதையடுத்து பார்வை ஒன்றே பொதும், புன்னகை தேசம், அற்புதம், வருசமெல்லாம் வசந்தம், காதல் திருடா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதைதொடர்ந்து சினிமாவில் அறிமுகமான பத்து ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். இதற்கு காரணம் பலரால் கேள்விக்குறியாகவே இருந்தது.

தற்போது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பிற்கும் குணால் இறப்பிற்கும் சம்மந்தம் உள்ளது என்றும் குணாலை போல் சுஷாந்த்தும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குணால் காதலர் தினம் படத்தில் நடித்தபின் சில நடிகராலும் இயக்குநராலும் அவமானப்படுத்தப்பட்டார் என்று சினிமா வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது.

கிடைத்த புகழை காப்பாற்றும் மனவலிமை இருந்தும் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்தார் குணால். இதனாலே மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கலாம். குணாலில் படவாய்ப்பினை பலர் தடுத்துள்ளனர். அது யார் யார் என்பது சினிமா சம்பந்தபட்ட பிரபலங்களுக்கே தெரியும்.

வாழு வாழ விடு என்று அனைவரும் இருந்தால், குணால், சுஷாந்த் போன்ற பல திறமைமிக்க நடிகர்கள் தற்கொலை செய்யும் நிலை உருவாகாது என்று இணையத்தில் பலர் கூறி வருகிறார்கள்.