லாக்டவுனில் பீட்டர்பால் மீது ஆரம்பித்த காதல்.. 40 வயதில் மூன்றாம் திருமணம் ஏன்?.. கதறி அழும் பிக்பாஸ் வனிதா..

Report
112Shares

தமிழ் சினிமாவில் விஜய்யின் நடித்த படத்தின்மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. நடிகர் விஜயகுமாரின் வாரிசு நடிகையாக அறிமுகமாகி அதன்பின்சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து இரு திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயானார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமாகி குக்வித் கோமாளி டைட்டில் வாங்கினார்.

தற்போது பீட்டர்பால் என்பவருடன் ஜூன் 27ல் திருமணம் என்று சமுகவலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக கூறினார். இதற்கு என்ன காரணம் காதல் எப்படி உருவானது என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உருக்கமாக அழுது கூறியுள்ளார்.

லாக்டவுன் நேரத்தில் எனது யுடியூப் சேனலை பார்த்து கொண்ட பணியாளர்கள் இல்லாமல் அவதிப்பட்டேன். போட்ஸ் புரொடக்‌ஷன் வேலை செய்து வரும் பீட்டர் பால் அப்போது நட்பாக இருந்து வந்தார். அனிமேஷன் வேலை செய்து வந்த அவர் என்னிடம் யுடியூப் சேனல் பற்றி கேட்டார்.

அதுபற்றி கூறிய போது அவர் உடனே வந்து உதவினார். 5.0 லாக்டவுன் நேரத்தில் என்னிடன் வந்து காதல் புரோபோஷ் செய்தார். அதை நான் ஏற்றுகொண்டேன்.

இதையறிந்த எனது மகள் மிகவும் சந்தோஷப்பட்டால். உங்களுக்கு இது முக்கியம், நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நீங்கள் தனிமையாக இருப்பீர்கள். உங்களுக்கு என்று ஒருதுணை வேண்டும் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஆழமாக யோசித்தவள் போல் கூறினாள்.

மேலும் திருமண நாள் குறித்து என் அம்மாவிடன் கேட்டபோது கலந்து பேசினோம். எனது கண்ணில் ஜூன் 27 பட்டது. அந்தநாள் என் அம்மா அப்பாவின் திருமண நாள் அதே நாளில் திருமணம் செய்யலாம் என்று உடனே பீட்டர்பாலிடன் கூறினேன்.

அவரும் ஓகே என்று கூறி திருமணத்திற்கான ரிங்கை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளோம். ஆனால் லாக்டவுனால் டெல்லியில் இருந்து வரவில்லை. அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை என்று இப்படியாக எனது திருமணம் நடைபெறப்போகிறது என்று உருக்கமாக கூறி அழுதார்.