படவாய்ப்பில்லாமல் 38 வயதில் ஆளேமாறிய அஜித்பட நடிகை மீரா ஜாஸ்மீன்!.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1248Shares

முன்னணி நடிகைகள் தற்போது சினிமாவில் இருக்க பல படங்கள் வெற்றிபெற்று மார்க்கெட் கொடுத்ததன் மூலம் தான். ஆனால் ஒருசிலருக்கோ படங்கள் அமையாது காணாமல் போய்விடுகிறர்கள்.

அந்தவகையில் நடிகர் மாதவன் நடித்த ரன் படத்தின் மூலம் மலையாள நடிகையாக இருந்து தமிழில் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மீன். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்ளான விஜய்யுடன் புதிய கீதை, அஜீத் உடன் ஆஞ்சநேயா என பரபரப்பான ஹீரோயினாக மாறினார்.

இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் மீண்டும் விஷாலுடன் இவர் நடித்த சண்டக்கோழி படம் மீண்டும் மீரா ஜாஸ்மினை தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

அதன்பிறகு சில படங்கள் சொதப்பியதால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. சில படங்களில் நடித்தும் அந்த படங்கள் ஓரளவிற்கு கூட ஓடாததால் சினிமாவை விட்டு விலகினார்.

2014 ஆம் ஆண்டு துபாய் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணம் இரண்டு வருடங்களில் இருவருக்கு பிரச்சனை வந்து விவாகரத்து வரை சென்று மீண்டும் இணைந்து வாழ்ந்தனர். இதையடுத்து துபாயில் செட்டில் ஆனபின் மீண்டும் தற்போது படங்களில் நடிக்க அர்வம் கொண்டு ரீஎண்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.