விஜய்யை மேடையில் ஒருமையில் திட்டினாரா நடிகர் பிரகாஷ்ராஜ்?.. 11வருட பகைக்கு இதுதான் காரணமா?..

Report
420Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஜூன் 22ல் இவரது பிறந்தநாளை லாக்டவுன் நேர்த்திலும் இணையத்தில் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து கூறினர்.

தளபதி விஜய், பிரகாஷ்ராஜ் கூட்டணி என்பது கில்லி படத்தில் இருந்து ஆரம்பித்து வில்லு வரை சிறப்பாக அமைந்தது. கில்லி, சிவகாசி, வில்லு படத்திற்கு பிறகு இவர்கள் இருவரின் கூட்டணி படங்கள் எதுவும் கமிட்டாகாமல் இருந்து வருகிறது.

இதற்கு காரணம் என்ன என்று பலரி கேள்விகள் எழுந்தது. விஜய் பிறந்த நாளன்று கூட நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்த்து கூறவில்லையாம்.

இந்நிலையில் இவர்களின் கூட்டணி அமையாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யை மரியாதையில்லாமல் மேடையில் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. வில்லு படத்திலேயே இருவருக்கும் சில பிரச்சனைகள் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வில்லு படம் 11 வருடங்களாகி இருவரும் பேசாமால் இருந்து வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய்யிடம் பிரகாஷ்ராஜ் தரப்பில் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டுள்ளனர். இதற்கு விஜய் மறுத்துள்ளதாகவும் எந்த ஒரு பத்லையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் விஜய் என்ற கூட்டணி அமைந்தால் படம் சூப்பர் ஹிட் என்றளவிற்கு இருக்கும் என்றும் சீக்கிரம் பகையை மறந்து இருவரும் இணைந்து படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி வருகிறார்களாம்.