படவாய்ப்பில்லாமல் இந்த தொழில் செய்கிறாரா அஜித்பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
694Shares

வடமாநில நடிகைகள் தற்போது தென்னிந்திய சினிமாவில் கமிட்டாகி நடித்து வரும் சூழல் அந்த காலகட்டத்திலேயே ஆரம்பித்தது. அந்தவகையில் 1994ல் கருத்தம்மா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மகேஷ்வரி.. இதையடுத்து தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்தார்.

இதன்பின் நடிகர் அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்து பிரபலமானார். திரையுலகமே உறவினர்களால் சூழ்ந்து வாழ்ந்தவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் என்ற பெருமையும் கூட.

மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சூப்பர் ஹிட் கொடுத்தும் வந்தார். நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், சுயவரம், ரத்னா, அதே மனிதன் போன்ற படங்களில் நடித்து வந்த மகேஷ்வரி ஜெயகிருஷ்ணன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இதைதொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது அதே கண்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய அத்தை உறவினர்களில் ஒருவர்.

படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போதும் கூட மாடலிங் படிப்பு உதவியுள்ளது. இதன்மூலம் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் இருக்கும் போதே செய்து வந்துள்ளார்.. இதை தற்போதும் செய்து வருகிறார்.

நடிகை ஸ்ரீதேவி எங்கு சென்றாலும் மகேஷ்வரி செய்த ஆடையை அணிந்து தான் செல்வாராம். இருவரும் பார்ட்டி, விழாக்கள் சென்றாலும் இவர் வடிவமைத்த ஆடையைத்தான் அணிந்து கொண்டு செல்வார்.

தற்போது மாடலிங்கில் செய்த சில ஆடை வடிவமைப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மகேஷ்வரி.