தூக்கிவிட்ட இயக்குநரையே மூஞ்சில் அடித்த சூர்யா?.. நந்தா படத்திற்கு பிறகு இருவருக்கும் நடந்தது என்ன?

Report
1122Shares

தமிழ் சினிமாவை தாண்டி அதிக ரசிகர்கள் பட்டாளத்தினை தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு வருபவர் நடிகர் சூர்யா. படத்துக்கு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுபவர் சூர்யா.

சூர்யாவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய அளவில் கவர்ந்து தூக்கிவிட்ட படங்களில் முதல் இரண்டாக இருப்பது பிதாமகன் மற்றும் நந்தா தான். சூர்யாவை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த இரண்டு படங்களும் பிடிக்கும்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸிலும் சரி விமர்சனங்களிலும் சரி பெரும் வெற்றியை பெற்றது. அடுத்த கட்ட படங்களுக்கு இந்த இரு படங்களும் தான் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் நந்தா படத்திற்குப் பிறகும் பாலா சூர்யாவிடம் சென்று அடுத்த அதற்கு சூர்யா தனக்கு இப்போது உள்ள மார்க்கெட்டிக்கு உங்களுடன் சேர்ந்து படம் செய்தால் சரி வராது என கூறிவிட்டாராம்.

அப்படி நான் நடித்தாலும் அப்படம் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சனம் கதை ரீதியாக சரியாக அமையாது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நந்தா படத்திற்கு பிறகு சூர்யாவின் படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த இலக்கினை நோக்கி கடந்து கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் முடிவு சரியானது தான் என்று மனதில் கூறி கொண்டு சென்றுள்ளாராம்.

மேலும் இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஷால் நடித்து வெளியான அவன் இவன் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தும் கொடுத்துள்ளார்.

என்னதான் இருந்தாலும் சூர்யா மூஞ்சியில் அடித்தது போல் கூறியது இயக்குநர் பாலாவிற்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி இருக்குமே என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சில காலம் சூர்யாவுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருவரும் மறைந்து வாழ்கிறார்கள் என்று கிசுகிசுக்கின்றனர்.