விமானத்தில் எல்லைமீறி நடந்து கொண்ட ரசிகர்! ஷாக்கான பிரபல நடிகை ராதிகா ஆப்தே..

Report
142Shares

பாலிவுட் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் கார்த்தி, ரஜினிகாந்த் படங்களில் நடித்து அறிமுகமானார்.

தற்போது படுமோசமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஆடையில்லா காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என அனைத்திலும் போல்ட்டாக நடித்து வருபவர்.

தற்போது ’தி ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற வெப்சீரிஸ் படத்தினை இயக்கியுள்ளார். கொரானா லாக்டவுன் என்பதால் படத்தினை திரையில் வெளியிடாமல் தவித்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் பெரிய ஹிட் கொடுத்ததால் பாம் ஸ்பிரிங்ஸ் என்ற விருது போட்டியில் சிறந்த குறும்படம் மிட்நைட் குறும்படம் விருதினை பெற்றுள்ளது.

கொரானா லாக்டவுனால் லண்டனில் அவரது கணவ்ர் பெனடிக்ட் டெய்லருடன் வசித்து வரும் ராதிகா ஆப்தே, வெளியில் சென்றால் தன்னுடைய வெப்சீரிஸ் பற்றி பலர் பாராட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு முன் சென்றபோதெல்லாம் இப்படியாரும் பார்த்திராத ராதிகாவை தற்போது காண்கிறார்கள் ரசிகர்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் தன்னிடைய ரசிகர்களால் நடந்த சில கசப்பான சம்பவத்தை கூறியுள்ளார். வெளியில் நான் செல்லும் போது ரோட்டில் இருக்கும் போதே சிலர் பெயரை கத்தி கூப்பிடுவது போன்ற நிலையால் கோபப்படுவேன்.

மேலும் ஒருமுறை விமானத்தில் பயணித்த போது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு அசதியாக இருக்கிறது என்று கூறி தவிர்த்து விட்டேன். இதையடுத்து விமானத்தில் அயர்ந்து தூங்கி எழுந்த போது அந்த ரசிகர் என் பக்கத்தில் வ்ந்து அவருடைய செல்போனை எடுத்து புகைப்படத்தை எடுத்ததும் எனக்கு ஷாக்கானது.

இதை பெரியதாக்க விரும்பாமல் கோபத்தை அடக்கி கொண்டேன். ரசிகர்களையும் பகைத்தால் சங்கடமாகிவிடும் என்று நினைத்து மனமுடைந்து கிளம்பி வந்தேன் என்று கூறியுள்ளார்.