நெப்போலியனை அசிங்கப்படுத்தினாரா தளபதி விஜய்.. பல ஆண்டுகளாக பேசாமல் இருப்பது இந்த காரணமா?

Report
378Shares

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவர் நடித்து வெளியாக காத்திருக்கும் படம்தான் மாஸ்டர். இத்திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடமும் பிரபலங்களிடமும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்களும், பிரபலங்களும் அவரவர் பாணியில் வாழ்த்துகளை கூறியும் தளபதி விஜய் பற்றிய அனுபவங்களையும் கூறி வந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகரான நெப்போலியன் தளபதி விஜய் குறித்து ஒரு பேட்டியில் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் போக்கிரி.

அப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் நெப்போலியன். படத்தின் படப்பிடிப்பில் விஜய்க்கு நடிகர் நெப்போலியனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து அவருடன் பேசுவதில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் படங்களையும் நான் காண்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

இதற்கான காரணம் போக்கிரி படத்தின் போது நெப்போலியனுக்கு தெரிந்தவர் விஜய்யை பார்க்க வேண்டும் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று விஜய்யிடம் கூட்டிச்சென்றுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்து பேசி புகைப்படம் எடுத்து சென்றுள்ளார்.

மேலும் இதைதொடர்ந்து நெப்போலியன் தெரிந்தவர்களை கூட்டி சென்றபோது விஜய் கொஞ்சம் கோபமாக இருந்துள்ளார். தனது கேரவனுக்கு அனுமதியில்லாமலே வருவதை பிடிக்காமல் இனி அவரை பார்க்க அனுமதிக்காதே என்று காவலாளியிடம் விஜய் கூறியுள்ளார்.

தன்னை அசிங்கப்படுத்தி சங்கடத்தில் ஆழ்த்தியதால் தான் 13 வருடங்களாக விஜய்யிடம் பேசாமல், அவர் படம் பார்க்காமல் இருந்துள்ளார் நடிகர் நெப்போலியன்.