நடிகை ஷாலினி செய்த செயலால் கோபத்தில் தல அஜித்?.. இந்த நடிகர்தான் காரணமா?

Report
682Shares

தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகள் என்று போற்றப்படும் தம்பதியர்களில் தல அஜித் ஷாலினி ஜோடிதான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு வருபவர் நடிகர் அஜித்குமார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தல அஜித் பற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் பிரித்விராஜ். தல அஜித்தின் அவள் வருவாள் என்ற படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். சூர்யா சினிமாவில் இருந்து விலகுவார், அஜித் என்னை அவமானப்ப்படுத்தினார் என்று சர்ச்சையாக பேட்டியில் கூறினார்.

ஆனால் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், அஜித்தின் நடவடிக்கைகளை பார்த்து மிரண்டு போனேன் என்று கூறியுள்ளார்.

வழக்கமாக செல்லும் ஓட்டலுக்கு நடிகை ஷாலினி வருவார்கள். ஷாலினி நான் படித்த பள்ளியில் ஜூனியர். அங்கு என்னை பார்த்து பார்க்காமல் கண்டுகொள்ளாமலும் சென்றார். இதனால் கஷ்டப்பட்டு ஷாலினி மீது கோபப்பட்டேன்.

பின் ஷாலினி அஜித்திடன் நான் பிரித்விராஜை பார்த்து பேசாமல் வந்தேன் என்று கூறியுள்ளார். அதற்கு அஜித் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கடிந்து கொண்டுள்ளார். உடனே அவருக்கு போன் செய்து மன்னிப்பு கேள் என்று கூறியுள்ளார்.

இந்த செயலால் அஜித்தின் மீது மரியாதை அதிகமானதாக கூறியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.