விஜய் படத்தில் பார்ன் நடிகையாக நடித்ததற்காக வருத்தபடுகிறேன்!!.. சர்ச்சையை ஏற்படுத்திய அஜித்பட நடிகை..

Report
1553Shares

தமிழ் சினிமாவில் உயர்திரு 420 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கௌடா. இதன்பின் நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொழிகளில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். துப்பாக்கி, ஆரம்பம், இரும்புத்திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷரா கௌடா.

தற்போது லாக்டவுன் என்பதால் தனியார் இணையத்திற்கு பேட்டிகொடுத்துள்ளார். அதில் நான் துப்பாக்கி படத்தில் நடித்தற்காக வருத்தபடுகிறேன். என்னை இயக்குநர் முருகதாஸ் நடிகை காஜல் அகர்வாலின் தோழி கதாபாத்திரத்தில் நடிப்பதற்க்காக தான் அழைத்தார்கள். ஆனால் அந்த படத்தில் என் கதாபாத்திரம் பார்ன் சைட் நடிகையாக நடிக்க வைத்தனர்.

மேலும் துப்பாக்கி படத்த்தில் எனக்கு நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், விஜௌ, முருகதாஸ், சந்தோஷ் சிவன் மூவரின் அறிமுகம் தான். ஆனால் அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்கள் என்னை அழைத்தால் நான் நடிக்க தயாராக தான் உள்ளேன் என்று கூறியுள்ளார்.